செய்திகள்
மழை

தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை

Published On 2021-10-01 16:14 IST   |   Update On 2021-10-01 16:14:00 IST
தேனி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:

தேனி, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி நேற்று பகல் பொழுதில் தேனி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தபோதும் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்தது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.55 அடியாக உள்ளது. 686 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று முதல் போடி, உத்தமபாளையம் பகுதி பாசனத்திற்காக 95 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 15 நாட்கள் திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 4,794 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 53.05 அடியாக உள்ளது. 1048 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 1819 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை 150 கன அடி குறைக்கப்பட்டு 1669 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 10, தேக்கடி 18, கூடலூர் 17.5, சண்முகாநதி அணை 7.2, உத்தமபாளையம் 11.3, வீரபாண்டி22, வைகை அணை 14.6, மஞ்சளாறு 15, மருதாநதி 20, சோத்துப்பாறை 10, கொடைக்கானல் 8.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Similar News