செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா: அரசு கல்லூரி - 6 பள்ளிகள் மூடல்
மஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி:
ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விரிவுரையாளர் சென்று வந்த வகுப்புகளில் படித்து வந்த 140-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான முடிவுகள் வெளிவராத நிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர், 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளிக்கும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த பள்ளிக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. குன்னூர் வட்டாரத்தில் மேலும் 2 தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.