செய்திகள்
தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை

Published On 2021-09-28 18:40 IST   |   Update On 2021-09-28 18:40:00 IST
காவேரிப்பட்டணம் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவேரிப்பட்டணம் சண்முகசெட்டி தெருவை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 29). கட்டிட மேஸ்திரி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியின்போது தவறி விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த வந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News