செய்திகள்
கோப்புபடம்

தாராபுரம் உப்பாறு அணைப்பகுதிக்கு அரிய வகை கடல் பறவை வருகை

Published On 2021-09-24 07:39 GMT   |   Update On 2021-09-24 07:39 GMT
ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் ‘ரெட் நெக்டு பேலரோப்’ என்ற பறவை உப்பாறுக்கு வந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.
தாராபுரம்: 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்பாறு அணைப் பகுதிக்கு ஐரோப்பா உட்பட பல வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். இம்முறை வட அமெரிக்கா ஆர்டிக் பிரதேசத்தில் கடல் பகுதியில் வாழும் ‘ரெட் நெக்டு பேலரோப்’ எனும் அரிய வகை பறவை தாராபுரம் உப்பாறு அணைப் பகுதிக்கு வந்துள்ளது. 

இதுகுறித்து தாராபுரம் இயற்கை கழக நிர்வாகிகள் மகேஷ், சதாசிவம் கூறியதாவது: 

ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் ‘ரெட் நெக்டு பேலரோப்’ என்ற பறவை உப்பாறுக்கு வந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. இந்த பறவை மிகவும் அரிதான ஒன்று. 

இந்த பறவை இந்தியா மற்றும் இலங்கை கடற்கரைகளுக்கு வரும். பெரும்பாலும் இவை தீவுகள், கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஆயுட்காலத்தை கழிக்கும். 

ஏறத்தாழ 9 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து உப்பாறு அணைக்கு வந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. உப்பாறு அணைக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் என 190 வகையான பறவைகள் வருகிறது. அணையை முறையாக பராமரித்து நீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News