செய்திகள்
மாப்படுகை சுடுகாட்டில் ஸ்ரீ சித்தர் சுவாமி குரு பூஜையில் மகா படையல் தயார் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொரோனா நீங்க வேண்டி சுடுகாட்டில் 50 கிலோ அரிசி சாதத்தால் மகாபடையல்

Published On 2021-09-01 09:50 IST   |   Update On 2021-09-01 09:50:00 IST
மயிலாடுதுறை அருகே கொரோனா நீங்க வேண்டி சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, இனிப்பு பண்டங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
தரங்கம்பாடி:

சத்குரு சித்தர் சுவாமிகளின் 58-வது ஆண்டு சித்தி தினத்தை முன்னிட்டு, சுவாமி ஓங்காரநந்தா என்பவர், தனது சீடர்களுடன் மயிலாடுதுறை அருகே மாப்படுகை சுடுகாட்டில் விநோத வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை நடத்தினார்.

சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, இனிப்பு பண்டங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்த்து 50கிலோ அரிசி கொண்டு சாதம் படைக்கப்பட்டு, ஒரே இடத்தில் குவியலாக வைத்து, அதில், சாம்பார், மோர், ரசம், அப்பளம், வடை, பாயாசம், பழங்கள், இனிப்புப் பொருட்கள் கொண்டு மகா படையல் செய்யப்பட்டது.

தொடர்ந்து மகா படையலுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும் தனித்தனியே தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா நீங்க வேண்டி சிவாய மந்திரத்தை 108 முறை கூறி கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். பொதுமக்களுக்கு படையல் செய்யப்பட்ட உணவுப்பண்டங்கள் அங்கேயே வழங்கப்பட்டது. அவற்றை சுடுகாட்டிலேயே உண்டனர்.

இது குறித்து சுவாமி ஓங்காரநந்தா கூறும்போது, சுடுகாடு என்பது புனிதமான இடமாகும். இங்கு கண்ணுக்குத் தெரியாத சூட்சும ரூபத்தில், லட்சக்கணக்கான ஆன்மாக்கள் வசிக்கின்றன. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்கள் நீங்கும். அவர்கள் அமைதி அடைய வேண்டும். அவர்கள் அமைதி அடைந்தால், இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள் ஏற்படாது. இந்தியாவில் உள்ள மயானங்களை தூய்மைபடுத்தவேண்டும் என்றார்.

Similar News