செய்திகள்
நடுவட்டத்தில் ஊரடங்கை மீறிய கடைக்கு சீல் வைக்கப்பட்டது

நடுவட்டத்தில் ஊரடங்கை மீறிய கடைக்கு ‘சீல்’

Published On 2021-06-19 04:02 GMT   |   Update On 2021-06-19 04:02 GMT
நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் நடுவட்டம் பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினார்.
கூடலூர்:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் உள்பட சில வணிக நிறுவனங்களை மட்டும் குறிப்பிட்ட நேரம் திறந்துகொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இருப்பினும் விதிமுறைகள் மற்றும் ஊரடங்கை மீறும் செயல்கள் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் நடுவட்டம் பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது நடுவட்டம் பஜாரில் ஊரடங்கை மீறி மளிகை கடை திறந்து இருந்தது தெரியவந்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட கடைக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் அபராத தொகையை வசூலித்தார். பின்னர் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
Tags:    

Similar News