செய்திகள்
கொரோனா வைரஸ்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதாரத் துறை தகவல்

Published On 2021-06-16 15:37 IST   |   Update On 2021-06-16 15:37:00 IST
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய இடங்களில் இதுவரை 5 லட்சத்து 4,727 பேருக்கு கொரோனா சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள், இணை நோயாளிகள், பொதுமக்கள் என இதுவரை 2 லட்சத்து 8,398 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News