செய்திகள்
வேதாரண்யம் அருகே போலீசார் வாகன சோதனை
தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் ஆகியவற்றை உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் வீடு தேடி வந்து விற்பனை செய்யப்படுகிறது.வேதாரண்யம் தாலுகாவில் தேவையின்றி சுற்றித்திரிந்த 317 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்ட எல்லையான செங்காதலை பாலம் அருகே சோதனைச் சாவடி அமைக்கப்பட்ட வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தேவையின்றி வாகனங்களில் வருபவர்களுக்கு அறிவுரை கூறியும், முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முக கவசமும் போலீசார் வழங்கி வருகின்றனர்.