செய்திகள்
கொரோனா நிவாரண நிதிக்காக ரூ 7 ஆயிரத்தை கலெக்டர் பிரவீன் நாயரிடம் வழங்கியபோது எடுத்த படம்

உண்டியலில் சேமித்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி

Published On 2021-05-22 11:21 GMT   |   Update On 2021-05-22 11:21 GMT
மாணவி தனிஷ்கா, நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவிவருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து தொழில் அதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் அருள்மொழி தேவன் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், சீதாதேவி ஆகிேயாரின் மகள் தனிஷ்கா(வயது10). இவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனிஷ்கா, நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். பின்னர் அவர், கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிறுமியை, பாராட்டி நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News