செய்திகள்
கொரோனா வைரஸ்

திட்டச்சேரி பேரூராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

Published On 2021-05-18 18:40 IST   |   Update On 2021-05-18 18:40:00 IST
வடக்குபட்டக்கால் தெரு, வெள்ளத்திடல் உள்ளிட்ட 15 வார்டுகளிலும் குப்பைகள் அள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
திட்டச்சேரி:

தஞ்சை மண்டல உதவி இயக்குனர் மாஹிம் அபுபக்கர் அறிவுறுத்தலின்படியும், திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் வழிகாட்டுதலின் படியும் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட தைக்கால் தெரு, வாணியத்தெரு, தமிழர் தெரு, மேலத்தெரு, தெற்கு தெரு வடக்குதெரு, வடக்குபட்டக்கால் தெரு, வெள்ளத்திடல் உள்ளிட்ட 15 வார்டுகளிலும் குப்பைகள் அள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ப.கோவிந்தராஜ், வரித்தண்டலர் ஜெகவீரப்பாண்டியன், அலுவலக உதவியாளர் மாதவன், அமானுல்லா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News