செய்திகள்
தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் படிவங்களை பிரித்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கான தேர்தல் படிவங்கள் பிரித்து வைப்பு

Published On 2021-03-25 23:43 IST   |   Update On 2021-03-25 23:43:00 IST
சட்டமன்ற தேர்தலுக்காக ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 231 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலங்குடி:

சட்டமன்ற தேர்தலுக்காக ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 231 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து955 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 971 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 930 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய தேர்தல் படிவங்கள் ஏராளமானவை வந்துள்ளன. அவை ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு படிவம் வாரியாக தனியாக பிரித்து வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனுடன் வாக்காளர்களுக்கான படிவங்களும் தனியாக வைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியாக பிரித்து வைத்து அதனை ரப்பர் பேண்டில் கட்டி வைக்கின்றனர்.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு முன்பாக எல்லாம் தயார் நிலையில் அதிகாரிகள் வைக்கின்றனர். இதேபோல வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய பேலட் தாள் அச்சடித்து வந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

Similar News