செய்திகள்
புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது23). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒரு தலைக்காதல் சோகத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.