செய்திகள்
கோப்புப்படம்

வன்னியன்விடுதியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு

Published On 2021-01-16 14:46 IST   |   Update On 2021-01-16 14:46:00 IST
ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு வேறொரு தேதியில் நடத்தப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் இன்று(சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறும் என விழா கமிட்டியினர் அறிவித்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் வருவாய் கோட்டாட்சியர் தண்டபாணி ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானம் ஈரமாக இருந்ததாலும், தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் ஜல்லிக்கட்டை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுத்தார். இந்த ஜல்லிக்கட்டு வேறொரு தேதியில் நடத்தப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

Similar News