செய்திகள்
மரணம்

கீரனூர் அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

Published On 2021-01-16 14:39 IST   |   Update On 2021-01-16 14:39:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிணற்றில் மூழ்கிய ஐ.டி.ஐ. மாணவர் உயிர் இழந்தார்.
கீரனூர்:

கீரனூர் அருகே உள்ள சீரங்கப்பட்டியை சேர்ந்தவர் வீரப்பெருமாள். இவரது மகன் மணிகண்டன் (வயது 16). ஐ.டி.ஐ. மாணவரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி இறந்தார். அவரை, நண்பர் மீட்க முயன்றும் முடியவில்லை. பின்னர் அவர், சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் பாதிஅளவு தண்ணீரை வெளியேற்றி விட்டு மாணவரை மீட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிராம மக்களின் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News