செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

சென்னை விமான நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Published On 2021-01-07 21:27 IST   |   Update On 2021-01-07 21:27:00 IST
துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 3.72 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வெளிநாட்டில் இருந்து கடத்தி வரும் தங்கத்தை பறிமுதல் செய்வதுடன், கடத்தி வரும் நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்றாலும் தொடர்ந்து தங்கம் கடத்தல் சம்பவம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இன்று சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தின் சில பயணிகளிடம் இருந்து 1.97 கோடி ரூபாய் மதிப்பிலான 3.72 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.



இதில் 660 கிராம் எடைகொண்ட தங்கத்தை சாக்லெட் கவரில் மறைத்து வந்து கொண்டு வந்த பெண் பயணியிடம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைதும் செய்தனர்.

15 பயணிகள் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3.18 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Similar News