செய்திகள்
காரைக்குடி அருகே ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
காரைக்குடி அருகே ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
குன்றக்குடி போலீஸ்சரகம் ஆத்தங்குடி- முத்துப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 45). இவர் கோனாபட்டு பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீ்ட்டில் வசித்து வருகிறார். முத்துப்பட்டணத்தில் உள்ள இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அவர் அங்கு சென்று பார்த்த போது பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 12 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் நகை திருடியவர்களை தேடி வருகிறார்கள்.