செய்திகள்
வேதாரண்யத்தில் விவசாயியை தாக்கிய அண்ணன் கைது
வேதாரண்யத்தில் விவசாயியை தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது45). விவசாயி. இவருடைய அண்ணன் சேகர் (50). இதில் சேகர் வெளியூரில் வசித்து வருகிறார். இவர்களுடைய தாயார் செல்லம்மாள் இறந்த 30-ம் நாள் நிகழ்ச்சிக்கு சேகர் வெளியூரில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அண்ணன், தம்பிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சேகர் மற்றும் அவருடைய மகன் தீபக் ஆகியோர் சேர்ந்த சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கினர். காயம் அடைந்த சாமிநாதன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து செய்தனர். மேலும் தீபக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் சேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.