செய்திகள்
நில விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம வருவாய் அதிகாரி கைது
நில விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம வருவாய் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி மண்டலம் பசினிகொண்டா பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா, விவசாயி. இவருடைய மனைவி துளசி. இவருக்கு 2007-ம் ஆண்டு அரசு 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டா வழங்கியது. அரசு வழங்கிய நிலத்துக்கான விவரங்களை ராமகிருஷ்ணா ஆன்லைனில் பதிவு செய்ய, அந்தக் கிராம வருவாய் அதிகாரியை நாடினார். கடந்த பிப்ரவரி மாதம் ரைத்து பரோசா என்ற அரசு திட்டத்துக்கு ராமகிருஷ்ணா தகுதி பெற்றதால், அந்த நிலத்தின் விவரங்களை ஆன்லைனில் பதிவிட்டு தனக்கு பட்டா புத்தகம் வழங்க வேண்டும், என மீண்டும் கிராம வருவாய் அதிகாரியிடம் ராமகிருஷ்ணா மனு கொடுத்தார்.
ஆனால் கிராம வருவாய் அதிகாரி பட்டா புத்தகம் வழங்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும், இல்லையெனில் நிலத்தை ஏழைகளுக்கு வீட்டுமனைகளாக வழங்க ஏற்பாடு செய்யப்படும். உனக்கு நிலம் இல்லாமல் போகும், எனக் கிராம வருவாய் அதிகாரி கங்காத்ரி மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு ராமகிருஷ்ணா, நானே ஒரு ஏழை. என்னால் இவ்வளவு தொகையை தர முடியாது, எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணாவுக்கும், கிராம வருவாய் அதிகாரி கங்காத்ரிக்கும் இடையே ஒரு இடைத்தரகர் மூலம் ரூ.5 லட்சம் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ராமகிருஷ்ணா திருப்பதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.1 லட்சத்தை ராமகிருஷ்ணாவிடம் கொடுத்து, அதை கிராம வருவாய் அதிகாரியிடம் வழங்கும் படி கூறினர்.
அவர், ரூ.1 லட்சத்தை எடுத்துச் சென்று மதனப்பள்ளி அவென்யூ சாலையில் உள்ள கலர் லேப் ஒன்றுக்கு வர வேண்டும், எனப் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கிராம வருவாய் அதிகாரியிடம், ராமகிருஷ்ணா ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து, கிராம வருவாய் அதிகாரியான கங்காத்ரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.