செய்திகள்
அமைச்சர் ஓஎஸ் மணியன்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனிமைப்படுத்தி கொண்டார்

Published On 2020-09-02 16:27 IST   |   Update On 2020-09-02 16:27:00 IST
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்றவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதையடுத்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
வேதாரண்யம்:

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

நாகை மாவட்டத்தில் பவுன்ராஜ், பாரதி, மதிவாணன், தஞ்சை மாவட்டத்தில் கோவிந்தராசு, ராமச்சந்திரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகிய எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்கள் செல்வராசு, ராமலிங்கம் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி உடல் நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை மாவட்டம் ஓரடியம்பலத்துக்கு எடுத்து வரப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

இதில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார். ஓரடியம்பலத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள அவர் தன்னை ஒரு வாரத்துக்கு யாரும் சந்திக்க வரவேண்டாம் என கூறி உள்ளார்.

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தவறாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வாட்ஸ்- அப் பதிவையும் வெளியிட்டுள்ளார்.

Similar News