செய்திகள்
சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை படத்தில் காணலாம்.

சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளம் மூடப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-08-25 09:13 GMT   |   Update On 2020-08-25 09:13 GMT
நாகூர் பெருமாள் வடக்கு வீதியில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகூர்:

நாகையை அடுத்த நாகூரில் பெருமாள் வடக்கு வீதி தெரு உள்ளது. இந்த தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெரு கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. மேலும் இந்த தெரு வழியாக பழைய பஸ் நிலையம், தர்கா, கடைத்தெரு ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் தங்களது வாகனங்களில் செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த தெரு வழியாக செல்லும் சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூர் பெருமாள் வடக்கு வீதியில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News