செய்திகள்
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.

கடலூரில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் போராட்டம்

Published On 2020-08-20 17:55 IST   |   Update On 2020-08-20 17:55:00 IST
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ ரசீது (பில்), மருத்துவ படி வழங்க கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கடலூர்:

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ ரசீது (பில்), மருத்துவ படி வழங்க வேண்டும் என்று கடந்த 18 மாதங்களுக்கு மேலாக மத்திய அரசிடமும், நிர்வாகத்திடமும் வலியுறுத்தி வந்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கம் அறிவித்து இருந்தது. 

அதன்படி கடலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு கிளை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில உதவி செயலாளர் முத்துக்குமரசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

இதில் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் மணி நன்றி கூறினார்.

Similar News