செய்திகள்
பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிப்பாளையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் தங்கமணி (வயது 23). இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா வழக்குப்பதிவு செய்து தங்கமணியை கைது செய்தார்.