செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு

Published On 2020-08-19 10:27 GMT   |   Update On 2020-08-19 10:27 GMT
விநாயகர் சதுர்த்தி விழாவை சமூக இடைவெளியுடன், அரசு அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
கடலூர்:

பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் பொதுச்செயலாளர்கள் பாஸ்கர், விஜயரங்கன், அக்னி கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வினோத், நகர தலைவர் வேலு.வெங்கடேசன், ஊடக பிரிவு ஜனனி ஸ்ரீதர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இந்துக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் மக்களின் மன உணர்வை மதித்து சில ஆலயங்களில் திருவிழா நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவையும் சமூக இடைவெளியுடன், அரசு அனுமதிக்கும் உரிய எண்ணிக்கையோடு கடலூர் மாவட்டம் முழுவதும் கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News