செய்திகள்
வாட்ஸ்-அப்பில் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது
மயிலாடுதுறை அருகே செல்போனுக்கு ‘ரீ-சார்ஜ் செய்ய வந்த பெண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாலையூர்:
மயிலாடுதுறை அருகே உள்ள அகரவல்லம் பகுதியில் முகமதுஅப்ரித்(வயது21) என்பவர் செல்போன் ‘ரீ-சார்ஜ்’ கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 வயது பெண் ஒருவர் தனது செல்போனுக்கு ‘ரீ-சார்ஜ்’ செய்துள்ளார். அந்த செல்போன் எண்ணை பதிவு செய்து கொண்ட முகமதுஅப்ரித், செல்போனில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி உள்ளார். மேலும் வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த பெண், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுஅப்ரித்தை கைது செய்தனர்.