செய்திகள்
கைது

போலி சிகரெட் பாக்கெட்டுகளை பதுக்கிய கடை உரிமையாளர் கைது

Published On 2020-08-16 12:49 IST   |   Update On 2020-08-16 12:49:00 IST
பெண்ணாடம் அருகே போலி சிகரெட் பாக்கெட்டுகளை பதுக்கிய கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:

பெண்ணாடம் பகுதிக்குட்பட்ட கிராமப்புற மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அதன்அடிப்படையில் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தங்களது காவல் நிலைய சரகத்துக்குபட்ட கிராமங்களில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் போலியாக தயாரிக்கப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அட்டை பெட்டிகளில் இருந்த 154 போலி சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அந்த கடையின் உரிமையாளரான அதேஊரை சேர்ந்த சர்புதீன் மகன் ஷாஜகான்(வயது 34) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது கடைக்கு போலியாக தயாரிக்கப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர்கள் யார்? என்றும், இதுபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News