செய்திகள்
மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்

வேலூர் மாவட்ட நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள்

Published On 2020-07-18 14:52 GMT   |   Update On 2020-07-18 14:52 GMT
வேலூர் மாவட்டத்தின் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கடைகளை திறப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சிப் பகுதிகளில் மட்டும் கடைகள் திறக்க புதிய நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், பள்ளிகொண்டா பேரூராட்சியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர்த்து அனைத்து வகையான கடைகளும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டும் இயங்க வேண்டும்.

இந்த உத்தரவு மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள், நகைக்கடைகள், பேக்கரி, ஹோட்டல்கள், தேநீர் கடைகள், துணிக்கடைகள், ஹார்டுவேர் கடைகள் என அனைத்துக் கடைகளுக்கும் பொருந்தும்.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கும் மற்ற அனைத்து வகையான கடைகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News