செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா சிறப்பு வார்டில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு

Published On 2020-06-19 14:25 IST   |   Update On 2020-06-19 14:25:00 IST
கொரோனா சிறப்பு வார்டை ஐ.ஜி.நாகராஜன், டி.ஐ.ஜி. தேன்மொழி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பணியில் சுகாதார துறையினர், வருவாய் துறையினர், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது கொரோனா சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்காகவே 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வார்டை ஐ.ஜி.நாகராஜன், டி.ஐ.ஜி. தேன்மொழி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆஸ்பத்திரி முதன்மை செயல் அலுவலர் சேகர் உள்பட ஆஸ்பத்திரி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News