செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த இளைஞர்களுக்கான திறன் பயிற்சி- கலெக்டர் தகவல்

Published On 2020-06-09 09:22 GMT   |   Update On 2020-06-09 09:22 GMT
கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஆண், பெண் இரு பாலருக்கும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட உள்ளது என்று சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தற்போது பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்து கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசித்து வரும் வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் இரு பாலருக்கும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட உள்ளது.

எனவே கொரோனா தொற்று நோய் பரவுதல் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கிராம பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாளர்களையும், நகர்புற பகுதிகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள சமுதாய ஒருங்கிணைப்பாளர்களையும் தொடர்பு கொண்டு உரிய விவரத்தினை பதிவு செய்து பயனடையுமாறு சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News