செய்திகள்
மணல் குவாரி

திருப்புவனம் அருகே ஏனாதி கிராமத்தில் மணல் குவாரி அமைக்கக்கூடாது- வட்டாட்சியரிடம் மனு

Published On 2020-06-08 12:49 GMT   |   Update On 2020-06-08 12:49 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா ஏனாதி கிராமத்தில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று ஏனாதி கிராம விவசாயிகள் திருப்புவனம் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளில் மணல், சவடு அள்ளப்பட்டு வருகிறது. 0.9 மீட்டர் அளவு ஆழத்திற்கே மணல் அள்ள கனிம வளத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் மணல், சவடு 40 முதல் 50 அடி வரை அள்ளப் படுகின்றன.

சவடோ, மணலோ அள்ளக்கூடாது என்று உயர்நீதிமன்றம் 2019-ல் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கனிமவளத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

அதாவது உபரி மண் அள்ளிக் கொள்ளலாம், 0.9 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே அள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மணல், சவடு மணல், திருப்புவனம் அருகே உள்ள சங்கட்டி, கானூர், பாப்பாகுடி, கருங்குளம் ஆகிய பகுதிகளில் அள்ளி வருகிறார்கள்.

இந்த சட்ட விரோத காரியத்தை தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி திருப்புவனம் வட்டாட்சியரிடம் கூறினார்.

இதனால் ஏனாதி கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மனுவும் கொடுத்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாண்டியப்பன், நீலமேகம், ஜோதி, பிரபாகரன் ஆகியோர் வட் டாட்சியர் மூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News