செய்திகள்
ஊரடங்கால் திருக்கடையூர் அருகே போலீஸ்காரருக்கு எளிய முறையில் திருமணம் நடந்தது

ஊரடங்கால் எளிய முறையில் நடந்த போலீஸ்காரர் திருமணம்

Published On 2020-06-04 11:45 GMT   |   Update On 2020-06-04 11:45 GMT
திருக்கடையூர் அருகே ஊரடங்கால், எளிய முறையில் போலீஸ்காரர் திருமணம் நடந்தது.
திருக்கடையூர்:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வழிபாட்டு தலங்கள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் தடை செய்யப்பட்டன.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் திருமணங்கள் நடந்து வருகின்றன.

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே கிள்ளியூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் பொறையாறு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். திருநாவுக்கரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக நேற்று உறவினர்கள் 10 பேருடன் எளிய முறையில் திருநாவுக்கரசுக்கும், நந்தினிக்கும் திருமணம் நடந்தது. அப்போது மணமக்களும், திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் முக கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடித்தனர். 
Tags:    

Similar News