செய்திகள்
ரேசன் அரிசி

தமிழகத்திற்கு 2600 மெட்ரிக் டன் ரேசன் அரிசி- ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தது

Published On 2020-05-26 21:31 IST   |   Update On 2020-05-26 21:31:00 IST
தெலுங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 2600 மெட்ரிக் டன் ரேசன் அரிசி ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்து சேர்ந்தது.
வேலூர்:

தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் இருந்து 2600 மெட்ரிக் டன் ரேசன் அரிசி ரெயில் மூலம் இன்று காட்பாடி கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து ரேசன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த அரிசி மூட்டைகள் அங்கு பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வந்துள்ள இந்த ரேசன் அரிசி மூட்டைகள் மாவட்ட வாரியாக லாரிகளில் பிரித்து அனுப்பப்படுகிறது.

Similar News