செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கை மீறி கடைகளை திறந்த 2 வியாபாரிகள் மீது வழக்கு

Published On 2020-05-24 14:21 IST   |   Update On 2020-05-24 14:21:00 IST
ஊரடங்கை மீறி கடைகளை திறந்த 2 வியாபாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பண்ருட்டி:

பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஊரடங்கு அமலில் இருக்கும் போது இரவு 7மணிக்கு மேல் 2 வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பழவியாபாரம் செய்த தீபன், இனிப்பு கடை வைத்திருந்த வசந்த பிரசாத் , மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் இயக்கியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல இருசக்கர வாகனத்தில்  கெடிலம் ஆற்றில் இருந்து அரசு அனுமதியின்றி 2 மூட்டை மணல் திருடியதாக தயா நிதி, பாலு, புருஷோத்தமன், ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News