செய்திகள்
அரிசி

700 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

Published On 2020-05-18 11:35 GMT   |   Update On 2020-05-18 11:35 GMT
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள 700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள 700 குடும்பங்களுக்கு சமூக ஆர்வலரும் மேகா புளுமெட்டல் நிறுவனருமான மேகவர்ணம் தனது சொந்த செலவில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார்.

இதில் கிராம அம்பலக்காரர் சசி பாண்டித்துரை, முத்துராமலிங்கம், காளைலிங்கம், ராமகிருஷ்ணன், மருதுபாண்டியன், பாலசுப்பிரமணியம், கலைச்செல்வம், இருளப்பன், ராஜசேகர், சுப்பிரமணி, சீமான் ஜெகதீஷ், பிரபாகர், இன்பசேகரன், பில்லப்பன் மனோகரன், புகழேந்தி, ராஜேந்திரன், மாயழகு, போஸ், பாண்டி செல்வம், சிலம்பரசன், கமலதாசன், ராஜதுரை, அகிலன் மற்றும் ஜெயங்கொண்டம் நிலை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெகன், வினோத் கண்ணா, சேவுகமூர்த்தி, செல்வம், திரவியம், ஞானசேகரன் மற்றும் மல்லாக்கோட்டை இளைஞர்கள் கலந்துகொண்டனர். இவர் ஏற்கனவே மல்லாக்கோட்டை தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் பழுது பார்த்தல் உள்ளிட்டவைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News