செய்திகள்
வேலூரில் ஆட்டோ டிரைவர்களுக்கு மளிகை பொருட்கள்- த.மா.கா. மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி வழங்கினார்
வேலூரில் மூப்பனார் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் த.மா.கா. நிர்வாகிகளுக்கு வேலூர் மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி மளிகை பொருட்கள் வழங்கினார்.
வேலூர்:
வேலூரில் மூப்பனார் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் த.மா.கா. நிர்வாகிகளுக்கு வேலூர் மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி 15 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட தலைவர் பாலகணேஷ், மாவட்ட செயலாளர் சேகர், இளைஞரணி துணை தலைவர் சீனிவாசன், சதீஷ்குமார், வெங்கடேசன், தொழிற்சங்க தலைவர் முனியப்பன், ராஜேஷ்கண்ணா, தினேஷ்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.