செய்திகள்
கோட்டையில் சுத்தம் செய்யும் பணியை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

வேலூர் கோட்டை சுத்தம் செய்யும் பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2020-02-24 12:36 GMT   |   Update On 2020-02-24 12:36 GMT
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெட் கிராஸ் சார்பில் வேலூர் கோட்டை வளாகத்தை கல்லூரி மாணவ மாணவிகள் இன்று சுத்தம் செய்தனர்.

வேலூர்:

வேலூர் கோட்டையின் உட்பகுதியில் உள்ள மைதானத்தை சுற்றியும் அங்குள்ள கட்டிடங்களை சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடந்தன. மேலும் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடந்தது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் சார்பில் இன்று கோட்டை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது. கல்லூரி மாணவ மாணவிகள் கோட்டை காந்திசிலை முன்பு திரண்டு அங்கிருந்து கோட்டைக்குள் ஊர்வலமாக சென்றனர்.

இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் டாக்டர் இந்தர்நாத் தொல்லியல் துறை அலுவலர் ஈஸ்வர், ரெட் கிராஸ் சேர்மன் பர்வதம் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

ஆக்சிலியம் மகளிர் கல்லூரி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கோட்டை வளாகத்தை சுத்தம் செய்தனர்.

அங்கிருந்த புதர்களை அகற்றினர். மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

Tags:    

Similar News