செய்திகள்
கோப்பு படம்

சீர்காழி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை

Published On 2020-02-18 12:15 GMT   |   Update On 2020-02-18 12:15 GMT
சீர்காழி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.
சீர்காழி:

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நாகை மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கி. ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் குமார், செற்குழு உறுப்பினர் சிங்காரவேல், மாவட்ட மகளிர்அணி செயலாளர் ஷீலாதேவி, மகளிர் அணி தலைவர் சுபா, நகரபொருளாளர் சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மோகன் வரவேற்றார்.

கூட்டத்தில் நகர ஒன்றிய பகுதிகளில் கட்சி கொடியேற்றுதல், அதிகளவு கட்சியில் உறுப்பினர்களை சேர்த்தல், கிளை அமைத்தல், நகராட்சி, பேரூராட்சி தேர்தல் பணிகள் மேற்கொள்வதற்கு ஆயத்தமாவது, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டிப்பது, மயிலாடு துறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்துவது, சீர்காழி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர தலைவர் ரகுநாதன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News