செய்திகள்
மயிலாடுதுறை அருகே பஸ் மோதி பெண் பலி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன நாகங்குடியை சேர்ந்தவர் மகாலட்சுமி(வயது32). இவர் இருசக்கர வாகனத்தில் தன் வீட்டுக்கு அருகே சாலையில் திரும்பும் பொழுது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது. இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தனியார் பஸ் மோதி பெண் பலியானதால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தனியார் பஸ்சின் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை- சீர்காழி சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.