செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

படப்பை அருகே ஒய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

Published On 2019-10-25 11:57 IST   |   Update On 2019-10-25 11:57:00 IST
படப்பை அருகே ஒய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படப்பை:

படப்பை அருகே உள்ள ஆனூர் வரதராஜா புரத்தில் குடியிருப்பவர் பிரபாகரன் ஓய்வுபெற்ற ஆசிரியர்.

நேற்று முன்தினம் பிரபாகரன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். இந்த நிலையில் நேற்று வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் ஊர் திரும்பினார். மணி மங்கலம் போலீசாருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் மணி மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது கொள்ளையர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதில் இருந்த 70 பவுன் தங்க, நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் இருந்து மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. வீடுபுகுந்து நகை கொள்ளையடித்தவர்களை மணி மங்கலம் போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News