செய்திகள்
போராட்டம்

மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-08-06 13:37 GMT   |   Update On 2019-08-06 13:37 GMT
குடியாத்தத்தில் அமைச்சர் உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் மேல்ஆலத்தூர் ரோடு ஜோகிமடம் என்ற இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 1 ஆண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் தங்கமணி இப்பகுதியில் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது பொதுமக்கள் இந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனு அளித்தனர். அதை ஏற்ற அமைச்சர் டாஸ்மாக் கடையை அன்றே மூட உத்தரவிட்டார். இதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க ஊழியர்கள் வந்தனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கடையை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சர் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட பின்பும் திறக்கப்படுவது ஏன் என ஆவேசமாக கூறினர்.

சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News