செய்திகள்
மதுராந்தகம் அருகே நெல் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
மதுராந்தகம் அருகே நெல் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. நெல் மொத்த வியாபாரி. நேற்று இரவு அவர் வீட்டை பூட்டிவிட்டு மாடியில் உள்ள அறையில் குடும்பத்துடன் தூங்கினார்.
நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 46 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி தப்பி சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை ஸ்ரீராமுலு எழுந்து வந்த போது தான் வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
இது குறித்து படாளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.