செய்திகள்
பள்ளிக்கரணையில் தேமுதிக நிர்வாகி உள்பட 5 பேருக்கு வெட்டு
பள்ளிக்கரணையில் தேமுதிக நிர்வாகி உள்பட 5 பேருக்கு கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரி:
சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், மேட்டு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவர் தே.மு.தி.க. ஒன்றிய இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் நேற்று இரவு வீட்டின் அருகே தனது நண்பர்களும் கட்சியினருமான வெற்றி (22),பாலா (32), கலைதாசன் (32) சிட்டிபாபு (32) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவர்கள் வைத்திருந்த கத்தியால் 5 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்
இதில் சுரேஷ், வெற்றி ஆகியோருக்கு கைகளில் வெட்டு விழுந்தது இருவரும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலா, சிட்டிபாபு, கலைதாசன் ஆகியோர் அதே பகுதியில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.