செய்திகள்

சிறுமிக்கு பாலியல் கொடுமை- போலீஸ் தேடிய கள்ளக்காதலன் கைது

Published On 2019-05-02 15:32 IST   |   Update On 2019-05-02 15:32:00 IST
சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

காஞ்சீபுரம்:

உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகையை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த வேளாங்கன்னி, அவரது கள்ளக்காதலன் அற்புதராஜ் ஆகியோர் வீட்டு வேலைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது சிறுமியை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலருக்கு பாலியல் விருந்து அளித்துள்ளனர்.

கடந்த வாரம் வீட்டுக்கு வந்த சிறுமி இதுபற்றி தனது தாயிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வேளாங்கன்னியை கைது செய்தனர். அவரது கள்ளக்காதலன் அற்புதராஜ் தலைமறைவாகி விட்டார்.

பின்னர் இந்த வழக்கு காஞ்சீபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வசந்தகுமார், பிரகாஷ், முத்துகல்யாண், மஞ்சுளா ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து தலைமறைவான அற்புதராஜை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான அற்புதராஜை உத்திரமேரூர் அருகே போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.

Similar News