செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு
ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுருளிவேல். இவரது மகள் வைத்தீஸ்வரி (வயது 17). திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் மதுரை மாவட்டம் உத்தப்ப நாயக்கனூர் பாறைப் பட்டியைச் சேர்ந்த மதி என்பவரும் படித்து வந்துள்ளார். வைத்தீஸ்வரிக்கு அம்மை நோய் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். செல்போனில் பேசி வந்த மதி யாருக்கும் தெரியாமல் வைத்தீஸ்வரியை கடத்திச் சென்று விட்டார்.
இது குறித்து சுருளிவேல் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.