செய்திகள்
கோப்புப்படம்

விருத்தாசலம் அருகே ரூ.1லட்சத்து 5ஆயிரம் பறிமுதல்- திமுக நிர்வாகி மீது வழக்கு

Published On 2019-04-18 10:12 GMT   |   Update On 2019-04-18 10:12 GMT
விருத்தாசலம் அருகே உரிய ஆவணமில்லாததால் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திமுக நிர்வாகி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விருத்தாசலம்:

கடலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக 6 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும்படை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தேர்தல் விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வந்தது. உடனே பறக்கும் படை அதிகாரி சுரேஷ் குமார் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் அவரிடம் விசாரித்தபோது அவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி. புத்தூரை சேர்ந்த நடராஜன் என்பதும், தி.மு.க நிர்வாகி என்பதும் தெரியவந்தது. அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் சப்-கலெக்டர் பிரசாந்திடம் ஒப்ப டைக்கப்பட்டது.
Tags:    

Similar News