செய்திகள்

தக்கலை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளி கைது

Published On 2019-04-12 11:37 GMT   |   Update On 2019-04-12 11:37 GMT
தக்கலை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

தக்கலை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாதம் 19-ந்தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு தேர்வு எழுத செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார்.

ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மாணவியை தேடி பள்ளிக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர்.

எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

மேலும் மாணவியை கண்டு பிடிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்களும் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவியை மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெஸ்லின் ராஜகுமார்(வயது22). தொழிலாளி என்பவர் மாணவியை கேரளாவுக்கு கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று ஜெஸ்லின் ராஜகுமார் மற்றும் கடத்தப்பட்ட மாணவியையும் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் இருவரையும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து ஜெஸ்லின் ராஜகுமாரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News