செய்திகள்

வந்தவாசி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-03-30 15:47 IST   |   Update On 2019-03-30 15:47:00 IST
தாம்பரம் நகராட்சி பொறியாளர் பிரிவு ஆய்வாளரை தாக்கிய ஒப்பந்ததாரரை கைது செய்ய கோரி வந்தவாசி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வந்தவாசி:

தாம்பரம் நகராட்சி பொறியாளர் பிரிவு ஆய்வாளராக உள்ளவர் ருத்ரமூர்த்தி. இவரை கடந்த 25ந் தேதி அன்று பணிகளை பார்வையிட்டு சென்றுவிட்டு அலுவலகத்திற்கு வந்தவரை ஒப்பந்ததாரர் ரகுநாதன் என்பவர் தகாத வார்தைகளால் பேசி செருப்பால் தாக்கியது அலுவகத்தில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளாதால் பதிவுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சம்பவத்தை கண்டித்தும், பொறியாளர் பிரிவு ஆய்வாளரை தாக்கியவரை கைது செய்ய கோரியும் தமிழ்நாடு நகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து நகராட்சி பணியாளர்கள் சங்கம், இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவாசி கிளை சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கட்டிட ஆய்வாளர் நடராஜன், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி சங்க துணை தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் மதிவாணன், மகளிர் அணி செயலாளர் பிரேமா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News