செய்திகள்

அம்மா பரிசு பெட்டகம் நினைவாகவே இந்த சின்னத்தை தேர்வு செய்தோம் - டிடிவி தினகரன்

Published On 2019-03-29 09:21 GMT   |   Update On 2019-03-29 09:55 GMT
ஜெயலலிதா அறிவித்த தாய் சேய் நலப்பெட்டகம் நினைவாகவே பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்வு செய்தோம் என அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #Dinakaran #GiftPack
காஞ்சிபுரம்:

டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்கு பின்னர் பொதுவான சின்னம் தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டள்ளது. அதன்படி டி.டி.வி. தினகரன் அணிக்கு பரிசு பெட்டகம் சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பரிசுப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் அடங்கிய பட்டியலை அனுப்பி தேர்வு செய்ய கோரியது. அதற்காக 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை எங்களுக்கு அனுப்பியது. அதில் பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தோம்.

ஜெயலலிதா அறிவித்த தாய் சேய் நலப்பெட்டகம் நினைவாக பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தேன். மிகப் பெரிய போராட்டத்திறகு பிறகு பரிசு பெட்டகம் சின்னம் கிடைத்துள்ளது. 

அமைச்சர் ஜெயக்குமார் எப்படி பேசுகிறாரோ, அதற்கு எதிராகவே மக்கள் வாக்களித்து வருகின்றனர். எனவே அவர் அப்படி பேசுவது எங்களைப் பொறுத்தவரை நல்ல சகுனம்தான் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #AMMK #Dinakaran #GiftPack
Tags:    

Similar News