செய்திகள்

செந்துறை அருகே தேர்வு எழுத சென்ற அரசு பள்ளி மாணவி மாயம்

Published On 2019-03-14 10:25 GMT   |   Update On 2019-03-14 10:25 GMT
செந்துறை அருகே தேர்வு எழுத சென்ற அரசு பள்ளி மாணவி மாயமானதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செந்துறை:

நத்தம் வட்டம் செந்துறை அருகே உள்ள சித்திரைக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த ஜெய ராமகிருஷ்ணனின் மகள் சித்ரா(16), பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இவர் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை 8-ந்தேதி மதியம் ஆங்கில தேர்வு எழுதுவதற்காக காலையில் படிப்பதற்காக சித்ராவின் தந்தை பள்ளியில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்துள்ளார்.

மதியம் நடந்த ஆங்கில பரீட்சையை மாணவி தேர்வு நடக்கும் அறைக்கு போய் எழுதவில்லை. வழக்கம் போல் தனது மகளை கூப்பிடுவதற்காக பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மகளை காணாமல் பரிதவித்தார்.

ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர் இன்று தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறினர். பள்ளிக்கு வந்த மகள் காணவில்லை என்று நத்தம் போலீஸ் நிலையத்தில் தந்தை ஜெயராமகிருஷ்ணன் புகார் மனு கொடுத்துள்ளார்.

இதையொட்டி நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News