செய்திகள்

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம் பெண்களை விபசாரத்தில் தள்ளிய கும்பல்- 3 பேர் கைது

Published On 2019-03-14 15:12 IST   |   Update On 2019-03-14 15:12:00 IST
சென்னை சாலிகிராமத்தில் சினிமா கம்பெனி நடத்துவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போரூர்:

சாலிகிராமம் வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா நிறுவனம் என்கிற பெயரில் சிலர் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவதாக தியாகராயநகர் துணை கமி‌ஷனர் அசோக்குமாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் விருகம்பாக்கம் நடேசன் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு அறையில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது. சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜா பெருமாள், நாமக்கலைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலு, மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பது விசாரணையில் தெரிந்தது.

சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த 3 இளம்பெண்களை மீட்டு மைலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பு நிறுவனம் என்கிற பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்களை அழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சினிமா கம்பெனி நடத்துவதாக கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெருமாள், பாலாஜி, சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News