செய்திகள்

தேர்தல் முறைகேடுகள் - புகார் தெரிவிக்க ‘வாட்ஸ்-அப்’ எண் வெளியீடு

Published On 2019-03-12 03:34 GMT   |   Update On 2019-03-12 03:34 GMT
தேர்தல் தொடர்பான முறைகேடுகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வசதியாக 94441 23456 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. #ParliamentElection #EC
சென்னை:

தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குதல், தடையை மீறி சுவர் விளம்பரங்கள் செய்தல், கட்டுப்பாடுகள் மற்றும் நேரம் கடந்து பிரசாரம் செய்தல், அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துதல் போன்ற தேர்தல் விதிமுறை மீறல்கள், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.

எனவே தேர்தல் தொடர்பான முறைகேடுகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வசதியாக 94441 23456 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த செல்போன் எண்ணில் பொதுமக்கள் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.  #ParliamentElection #EC
Tags:    

Similar News